LONLINESS:-
நான்
தனித்திருக்கிறேன்.
பனிப்பாறைகளுக்குள்
வால்ரஸ்
குட்டியாய்.
ராஜபுதனத்து
ஒட்டகமாய்
எங்கிலும்
யாவற்றிலும்
எதையோ
தேடித் தேடி
ஒருமையை
உணர்ந்து
என்னை
இருத்தியிருக்கிறேன்.
ஒற்றைக்
கொசுவாய்ச்
சங்கீதம்பாடி,
வழிதவறிய
எறும்பாய்
நர்த்தனம்
ஆடி
ஊரெல்லாம்
ஓடி
எல்லாம்
உணர்ந்து மீண்டு
தனித்திருக்கிறேன்.
விதைப்பு
விதைத்து
அறுவடை
பண்ணி
மீண்டும்
தரிசாகி
விதைப்புக்கு
இருக்கும் காத்து
நானோ
நீயோ அன்றி அதுவோ
ஏதோ
ஒன்று காத்தும்
தனித்தும்
இருக்கிறது.
--- 85 ஆம் வருட டைரி.
--- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))