நாளைய தலைவர்கள்.
பொங்கல்
புகையில்
தூரத்து
நிலங்கள் நடுங்கும்.
மனநிலம்
ஞாபகச்
சருகு புரட்டும்.
நானும்
அதுவும்
அதுவும்
நானும்
கயிறும்
கதம்பமுமாய்.
நாளையத்
தலைவர்கள்
இன்றைய
அம்மணதாரிகள்
புழுதியில்
ஊர்கோலம்போக
காலத்தின்
நாள் என்னும்
எண்ணற்ற
ஆக்டோபஸ் பிடிப்புகளில்
அங்கங்கே
தீவுகளாய்.மனிதர்கள்
எலும்புக்கூட்டு
கடல்களில்.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
4 கருத்துகள்:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அடித்துச் சொல்லப்பட்ட உண்மைகள் இவை நம் மனதின் கல்வெட்டாய் மாறாது அச்சுக் கோர்த்தமைக்கு தலை தாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன்.
85ஐ விட இப்போதைய இளைஞர்கள் கொஞ்சம் சமூக உணர்வோடு முன்னேறிவருவதை, சென்னை வெள்ளத்தின்போது பார்த்தோம். இதையும் சேர்த்து இப்போதைய கவிதையை எழுதுக
உண்மை உமா. கருத்துக்கு நன்றி எனது வணக்கங்களும்
நிச்சயம் எழுதுகிறேன் முத்து நிலவன் சார்
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))