பாதையெல்லாம்
சேறு
பார்த்துப்
போ
இருள்முன்
வெறிச்சென்று நில்
ஒரு
க்ஷணம் நிதானித்து
வழுக்கும்
விழுங்கும் சதுப்புகள் பார்த்து
சருகென
ஏமாறாமல் விலகிப் போ.
தரையெல்லாம்
சேறு
தடம்
பார்த்துப் பயணி.
ஊன்றுகோல்
நாடாமல்
நீருருஞ்சிய
நிலம் பார்த்து நட.
புற்களின்
கீழும்
வயல்களுக்குள்ளும்
மண்
உமிழ்நீர் சுமந்து
வாய்பிளந்து
நிற்கும்.
வயலுக்குள்
விழாமல்
கால்
நடாமல்
வரப்போடு
நட.
-- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))