புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வியாழன், 14 ஏப்ரல், 2016

எந்த உதயத்துக்கு இந்த இதயப் பெருமூச்சு ?எந்த உதயத்துக்கு இந்த இதயப் பெருமூச்சு ?

இதயப் பெருமூச்சு.
உலைக்களத்தில்
புறப்படும்
நீராவித் தகிப்பு, தவிப்பு.

எந்தக் குளிருக்கு
இந்தச் சுடுநெருப்பு. ?

எந்த மூச்சுக்கு
இந்தப் புகைக்குவிப்பு ?

எந்தச் சுற்றத்துக்கு
இதயக் கதவடைப்பு ?

பறவை இனங்களே !
உங்கள் சமூகத்திலும்
இந்த நம்பிக்கைத்
துரோகங்கள் உண்டா ?

உங்களிலும் பணக்காரன்
பண்டாரம் உண்டா ?

உங்கள் கூட்டத்திலும்
இதயத்தை அறுத்து அதுவும்
போதாதென்று
வெந்நீரிலிட்டு
வேலாலெறியும்
இரக்கமற்ற
இதயங்கள் : அன்று : அன்று
பாறைகள் உண்டா ?

உங்கள் கும்பலிலும்
உண்மையைத் திரித்துப்
பொய் பேசிடும்
விஷ நாக்குகள் உண்டா?
சொல்லுங்கள்.

ஓ!
இருக்கலாம் என்று
மௌனமொழி
பேசுகிறீர்களா ?

எந்த உதயத்துக்கு
இந்தத் தவமிருப்பு ?

எந்த ஜீவிதத்துக்கு
இந்தப் பரிதவிப்பு ?

NOTHING IS IMPOSSIBLE
IN THE WORLD
EXCEPT
FRIENDSHIP & LOVE.

கரையை உடைத்துவிட
வேண்டுமென்று
துடித்த உள்ள வெள்ளம்
கலங்கிய குட்டையாய்
சேற்றுக் குழம்பாய்
வற்றித் துடிக்கிற பரிதாபம்.

எந்த வெளிச்சத்துக்கு
இந்தத் துடிதுடிப்பு ?

-- 82 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...