கானல் தடாகத்தில்
அன்புத் தண்ணீரைத்
தேடிப் பயனில்லை.
தேவைகளுக்காகத் தேடல்களா ?
தேடல்களின் அவசியம் தேவைகளா ?
தேவைத் தேடல்களா ?
தேடல்த் தேவைகளா ?
என் உள்ளம் மட்டும்
மாறவில்லை.
எப்போதும் மாறாது.
ஆனால் நான்
நொடிக்கொருதரம்
இந்த இதயமில்லாக் கூட்டத்துள்
காணமற்போய்க்
கண்டுபிடிக்கப்படுகின்றேன்.
சொல் உளியால்
உடைந்து
நொறுங்கிய
உள்ளக் கேவல்கள்.
அழுகை அவலங்கள்.
பெண்ணே !.
மன உறுதி மட்டும்
மன உறுதி மட்டுமே!
நம் உடமையாக
உரிமையாக
ஏன் கடமையாக
இருக்கட்டும்.
--- 80 ஆம் வருட டைரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))