புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நீ நாதமென்றால் நான் கீதமாக :-நீ நாதமென்றால் நான் கீதமாக :-

நான்
கீதமாக இருக்க விரும்புகின்றேன்
நீ நாதமாக இருப்பதால்.

நான்
பாடலாக இருக்க விரும்புகின்றேன்
நீ பொருளாக இருப்பதால்.

நான்
கனியாக இருக்க விரும்புகின்றேன்.
நீ கிளியாக இருப்பதால்

நான்
மாணவியாக இருக்க விரும்புகின்றேன்.
நீ ஆசிரியையாக இருப்பதால்.

நான்
பக்தையாக இருக்க விரும்புகின்றேன்.
நீ தெய்வமாக இருப்பதால்.

நான்
உன்னுடன் இணைந்து
இருக்கவே விரும்புகின்றேன்.

ஏனெனில் நீ
என்றென்ம் உனது
தனித்தன்மையில் ( பிடிவாதத் தன்மையில் )
நீயாக இருப்பதால்.

-- 85 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...