மதுமலருக்காக :- ( தேன் மலர் )
மலரே !
மது மலரே !
தேன் மலரே !
இருள் பிரியாத அதிகாலைப் போதில்
சரியான உடையில்லாததால்
பற்கள் பறைகொட்ட
பனியில் நடுங்கும்
புற்களுக்கிடையில்
விடிவெள்ளியின்
வெள்ளைச் சிரிப்பில்
அதன் கண் சிமிட்டலில்
ஆதவனின் உதயச் சிவப்பில்
மரங்களின் உல்லாசச் சிலிர்ப்பில்
பறவைகளின் பலவித ஜாலங்களில்
நான் நடந்துவந்தபோது
ரோஜாவிலும் ராஜாவைப் போல்
நீ கம்பீரமாக காலை வணக்கம்
கூறினாயே..
உன் மனமும் அழகும்
வசந்தகாலக் காற்றின் உறவால்
என் நாசியையும் கண்ணையும் வந்தடைந்தன.
உன்னில் நிரம்பி வழியும் தேன்
வண்டுகளுக்குத்தான் சொந்தமோ ?
என் கண் வண்டுகளால்
அவற்றைச் சுவைக்க முடியவில்லையே. ! ஏன் ?
பதில் சொல்லேன் ! ப்ளீஸ்.. !
--- ஹிஹி குழந்தைப் புள்ள டைரி. - 80 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))