எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு.
அமைதியானவள் என்பதால்
சாந்தி என்றேன் ; ஆனால் நீ
என் அமைதியைப் பறித்துக் கொண்டாய். !
பிரியமானவள் என்பதால்
பிரியா என்றேன் ; ஆனால்
சொன்ன மறுநிமிடம் என்னை விட்டுப்
பிரிந்துவிட்டாய். !
இனிமையானவள் என்பதால்
இனியவளே என்றேன்.
; இனி
அவள்தான் என ஆகும் வேளையில்
இனி அவள்தானோவென எண்ண
வைத்துவிட்டாய். !
கண்ணைப் போன்றதால்
கண்மணியென்றேன். என்
கண்ணல்ல இதயமே
நோகுமாறு குத்திவிட்டாய். !
கொள்ளையழகுப் பெண்ணமுதே
கோடி இன்பம் கொடுத்துவிடேன். !
எங்கே நீ சென்றாலும் அங்கே
உந்தன் நிழலாய்ப் பின் தொடர்வேன். !
சீச்சீ இந்தப் பழம் புளிக்குமென எண்ணாது
ஏணிபோட்டு ஏறிப் பறித்திடுவேன்.
படிப்பதற்கு ஒரு மனமிருந்தால் உன்னை
மறந்துவிடலாம்.
மறப்பதற்கு ஒர் உமனமிருந்தால்
உடனே படித்துவிடலாம்.
ஆனால் இருப்பதோ ஒரே மனம் !
நான் என்ன செய்வேன் !.
-- 83 ஆம் வருட டைரியில் தோழி சாந்திக்காக எழுதியது. !!!!!! :) :) :) .
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))