எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 20 ஏப்ரல், 2016

மன உறுதி மட்டுமே !



மன உறுதி மட்டுமே !

கிளியாய் நான் பிறந்தாலும்
கிள்ளை மொழியில் கொஞ்சியிருப்பேன்.
கட்டெறும்பாய்ப் பிறந்தாலும்
கனிவோடு வாழ்ந்திருப்பேன்.
சிற்றெறும்பாய்ப் பிறந்தாலும்
சீரோடு மகிழ்ந்திருப்பேன்.
சின்னச் சிட்டாய்ப் பிறந்தாலும்
சிறகடித்தே பறந்திருப்பேன்.
புல்லாய் நான் பிறந்தாலும்
புன்னகை புரிந்தே வாழ்ந்திருப்பேன். !
கல்லாய் நான் பிறந்தாலும்
கவலையின்றிக் களித்திருப்பேன். !
இயந்திரங்கள் போல மனதை
அடிக்கடி மாற்றிவிட்டு
இஞ்சின் இதயங்களைப்
பொருத்திக் கொள்ளும்
இந்தப் பாழாய்ப் போன உலகில்
அலைமோதும் பாவஜென்மமாய்
மனித ஜென்மமாய்ப்
பிறந்துவிட்டேனே. !
என் செய்ய ?
எதற்காக இந்த அலைமோதல் ?
ஏனிந்த வீண் தேடல் ?
மனம் தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
இந்த உலகில்
உண்மையை
உண்மையான அன்பைத் தேடி
அலைகின்றேன்.
ஏனிந்த வீண் தேடல்
புரியாததுவும்
புரிந்ததும் போல் ஒரு குழப்பம்.

-- 80 ஆம் வருட டைரி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...