புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வியாழன், 14 ஏப்ரல், 2016

பூபாளமே இசைக்கட்டும். :-பூபாளமே இசைக்கட்டும். :-

எனக்குப் பயமாக இருக்கிறது.
எங்கே கொஞ்சங் கொஞ்சமாக
உன்னை உன் அன்பை
இழந்து விடுவேனே என்று. !

எனக்கு நீ முழுமையாக வேண்டும்
உன் அன்பு  ஆசை இன்பம் இதயம்
உடல் ஆவி எல்லாமே !
முழுமையாக !
பூரணமாக !

எனக்கு
எனக்கு மட்டுமே.

உன்னுடைய தகுதிகளால்
மயங்கி விடவில்லை. !

உன்னை என்னால் பங்கு போட முடியாது.
உன்னைப் பங்கு போட்டால்
உன்னில் இருக்கும்
என்னையுமல்லவா
கூறு போடவேண்டும்.

அன்று நீ சொன்னாயே
“உனக்கும் எனக்கும்
நீயும் நானும்” என்று. !

ஆனால் நான் கூறுகின்றேன்,
“எனக்கு நீ மட்டும்தான்
உனக்கு நான் மட்டும்தான் “

-- 82 ஆம் வருட டைரி. 

3 கருத்துகள்:

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

சூப்பர்--சரஸ்வதிராசேந்திரன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சரஸ் மேம்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...