சுய போதனை:-
மனசுள்ளே மூடி மூடி
மக்கிப் போனாய் நீ
முடி திற
காற்றிழு விட்டுவிடு
மீண்டும் புதுக்காற்றிழு.
மனமே
ப்ரியமாயிருந்திருந்து
நீ பெற்றுக்கொண்டதென்ன ?
கனிந்து கசிந்தது போதும்
கல்லாயிரு.
தப்பு உன் மேலில்லாதபோது
தரம் குறைத்துக் கொள்ளாதே;
தூசியாய்த் தட்டி விடு
அத்தனையும்
பறந்து போகட்டும்.
மற்றவர்களை
மகிழ்ச்சியாக்கி
நீ சாதிக்கப்போவதொன்றுமில்லை
நீயே சந்தோஷமாயில்லாத போது
மனமே
சிந்தனை குழப்பாமல்
சும்மாயிரு
உன் மேல் ப்ரியமாயிரு
உன்னை சந்தோஷமாக வைத்திரு
யார் வார்த்தைக் கல்லெறிந்தாலும்
உன்னைத் தாக்காது.
தப்பு உன் மேலில்லை
மனசே
சாந்தமாயிரு
ஜெயிப்பாய்.
-- 84 ஆம் வருட டைரி.
-- 84 ஆம் வருட டைரி.
4 கருத்துகள்:
பொறுமை என்றும் தேவை...
யார் வார்த்தைக் கல்லெறிந்தாலும் உன்னைத் தாக்காது,
தப்பு உன் மேலில்லை..சாந்தமாய் இரு, ஜெயிப்பாய்.
ஆஹா, அற்புத வரிகள் மனச் சாட்சிக்கும் அலைக்கழிப்பு
ஏற்படுகிறதே? தெய்வத்திற்கே சோதனை போன்ற
அழகிய வர்ண்ணை..நன்கு ரசித்தேன்.. நன்றி, தேனம்மை
அவர்களே!
வாழ்த்துக்களும் பிரார்த்தனையும். வாழ்க, வளர்க, வெல்க!
TV Narayanan through Face Book.
ஆம் டிடி சகோ
நன்றி டிவிஎன் சார். மிக அருமையா சொல்லி இருக்கீங்க.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))