ஏதோ சம்பந்தமில்லாத இடத்தில் வந்து மாட்டிக்கொண்டுவிட்டதாகத்
தோன்றியது நவீனாவுக்கு. மன உணர்ச்சிகளை உடனுக்குடன் பிரதிபலிக்கும் முகத்தின்மேல் கோபமாய்
வந்தது. ரமணன் பார்த்தால் கஷ்டப்பட்டுப் போவான்.
தன் உறக்கம் கெட்டுவிடக்கூடாது என்று ஐந்துமணிக்கு இவள் வைத்த
அலாரத்தின் தொண்டையை அமுக்கிவிட்டு பாக்கெட்பாலை வாங்கிக் குக்கரில் வைத்துவிட்டு வெந்நீருக்கு
ஹீட்டரைப் போட்டுவிட்டு இவள் விழித்த்துக் கொள்ளும் வேளைக்குள் அவன் குளித்துவிட்டுக்
காப்பியைக் கலந்துகொண்டிருப்பான். தன்னிலை மறந்த தன் உறக்கம் கண்டு அவளுக்கு வெட்கம்
ஏற்படும்.
ரமணன் அலுவலகம் சென்றுவிட்டான். பாக்கியம் வந்து சமையல் செய்து
மாவரைத்துத் துணிதுவைத்துவிட்டுப் போய்விட்டாள். அவளுக்கு அறுபது ரூபாய் சம்பளம்.
நவீனா குளித்துவிட்டு ஈரத்தலையை உலர்த்திக்கொண்டே ஸ்வெட்டர்
பின்னிக்கொண்டு இருந்தாள். வீட்டிலிருக்கும் தலையணை, குஷன் உறைகளில் உள்ள எம்பிராய்டரி
எல்லாம் அவள் போட்டதுதான். வாயில் திரைச்சீலைகள், சன்னல் திரைகள் ஆகியவற்றில் உள்ள
பெயிண்டிங்கும் அவள் செய்ததுதான். பேனா வைக்க பூனைக்குட்டி ஸ்டிக்கர் ஒட்டிய பேப்பர்
ஸ்டாண்டும் செய்திருக்கிறாள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வாழ்விலே
ஒரு நாள்:-
அவன்
கெஞ்சிக் கொண்டிருந்தான் இன்னமும். ”ஏய் இங்கே பாரேன்..! ச்சூ.. ! இங்க பாரும்மா.
!” “ப்ளீஸ் கொஞ்சம் என்னைப் பாரேன். !” எல்லா வார்த்தைகளும் காற்றில் கலந்தன.
“டேய்
There is no response from her. Then why are you making fiftieth attempt. “லேசாய்த்
தலைசாய்த்து இவள் திரும்ப அவனின் நண்பன் கூறிக்கொண்டிருந்தான்.
பிக்னிக்
வந்திருந்த பெண்கள் குழு குற்றாலத்தின் தேனருவியில் குளிக்கச் சென்று இருந்தது. ஏழு
பஸ்கள் நிறைய மலர்கள். மணம்மிக்க புதுப்பெண் மலர்கள். எவனுக்குத்தான் அலுக்கும், சலிக்கும்,
பெண்கள் திரும்பிவரக்காத்திருந்த வேளையில்தான் இத்தனை கலாட்டாக்களும்.
“ஏய்.!
சனியனே, பார்க்கப் போறியா இல்லையா இப்ப.! இவன் பாட்டுக்கு இங்க கூப்பிட்டுக்கிட்டேயிருக்கான்.
நீ பாட்டுக்கு என்ன ரொம்ப திமிரா இருக்கே. “ இவள் முகம் கோபத்தால் சிவக்க பிடிவாதத்துடன்
தலைதிருப்பாமல் அமர்ந்திருந்தாள்.
88888888888888888
நினைவின் துளிர்கள் :-
ஞாபகத்தின் கூர்முனைகளில் எங்கோ ஒரு சுரீர்த் தாக்குதல்
இவளை எங்கோ பார்த்திருக்கிறோமோவென்று. அந்த சாம்பல் நிறமும் லேசாய வலது காலைச் சாய்த்து வைத்து நடக்கும் தன்மையும், நேர்வகிடும், கோணவகிடுமில்லாமல் நேர்வகிட்டுக்குக் கொஞ்சம் தள்ளி எடுத்திருக்கும் வகிடும் அந்த நீள விரல்களும் அவளுக்கு எங்கேயோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்தது போலிருந்தது.
இவர் சோடா கண்ணாடி வழியாக முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, குலவிக் கொண்டிருந்த ஒரு ஹிப்பி ஜோடி வாக்கிங் ஸ்டிக்கை இடறிவிட்டு சாரி சொன்னது. இவர் சாரியை வாங்கிக்கொண்டு திரும்பிப் பார்கையில் அவள் காணாமல் போயிருந்தாள்.
கோழிக்கறி சாப்பிட்டுவிட்டுப் பல் குத்திக் கொண்டிருக்கையில் சிந்தனையும் விந்தி விந்தி நடை போட்டது.
88888888888888888
போடா நந்து .. நான் வர முடியாது என்று முரண்டினாள், அவன் வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து அவளை அமரவைக்க டேய் சுந்து ஒரே இருட்டு எனக்குப் பயமாயிருக்குடா. என்னை விடுடா நான் வர முடியாத்.. என்று தலையைச் சிலுப்பிக்கொண்டிருக்க இவன் படாரெனெ சுவேகாவைக் கிளப்ப, அது திரும்பிய வேகத்தில் அவள் சரிந்து போய் அவனைப் பிடித்துக் கொள்ள அவன் ரொம்பவும் அவஸ்தைப்பட்டான்.
கோணல்மாணலாக ஓடிய சுவேகா எதிரே மோதுவதுபோல் வந்த வெள்ளை ஃப்யட்டைப் பார்த்ததும் ஒரு ஈர்ப்போடு அதனுடன் உரசிக் கொண்டு நின்றது. வெளியே இறங்கிய ஈசுவரன் என்னம்மா நந்து அம்மா உன்னைக் காணோமேன்னு தவிச்சிக்கிட்டு இருக்காடா.. சீக்கிரம் கார்ல ஏறு. என்று கூட நந்து குதித்துக்கொண்டே ஓடிப்போய் காரில் ஏறி அதன் விளக்கைப் போட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தாள். இவனிடம் ஈஸ்வரன் திரும்பி டேய் நந்துக் கண்ணா ரொம்ப தாங்ஸ்டா என்றார்.
888888888888888888888888

தகம் தஜம் தனம் தனனம் தகம் தஜம் தனனம் சலங்கை கட்டி ஒரு ஆக்ரோஷ
ஆட்டம் மனசின் குதிகால் அடுத்த ஆட்டத்துக்குக் காத்திருந்தது. ததரிகிடதம் ததரிகிடதம்.
காற்றை உதைத்து வெட்டிக் கொலை பண்ணி சித்திரவதைப் படுத்தினபின்..
-- 85 ஆம் வருடத்தில் எழுதி முடிக்க மறந்த கதைகள் இவை. :)
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))