டியர் பிள்ளையாரே ! வணக்கம். !
உன் முன் நான்
கரம் கூப்பி நிற்கும்போது
மகிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன்.
சந்தனக் காப்பில் நீ ஜொலிக்கும்போது
உன் கையைப் பிடித்துத்
தரதரவென்று இழுத்துக்கொண்டு
உலகெங்கும் ஓடத் தோன்றுகிறது.
ஏழை ஐயர் போல் நீ
சிம்பிளாய் உட்கார்ந்து
காத்து வாங்கும்போது
வருகின்றாயா நொண்டி விளையாட
என அழைக்க நினைக்கின்றேன்.
எருக்கலங்கொழுக்கட்டையின்
வாசத்தை மட்டும்
உனக்குக் காட்டிவிட்டு
லபக் லபக்கென்று விழுங்கும்
இவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க
நாந்தான் உன் ரெப்ரசெண்டேடிவ்.
அதனால் என்னிடம்
கொடுத்துவிடச் சொல்லி
அவர்கள் கனவில் ஒரு
டூப் அடியேன்.
உனக்கு எப்போதும்
அலட்சியமாய்ச் சிரிப்பது தவிர
வேறொன்றும் தெரியாதா.
எதற்கெடுத்தாலும் என்ன ஒரு
உதட்டுச்சுழிப்பு வேண்டிக்கிடக்குங்குறேன்.
என்னமோ உனக்குத்தான்
சிரிக்கத்தெரியும் என்கிறார்போல்.
உனக்கு உடல் தசைமலையாக இருந்தாலும்
ஒவ்வொரு அணுவிலும் அறிவு
கொட்டிக்கிடக்கின்றது.
உனக்கும் எனக்கும் க்யூப்
சால்வ் பண்ணும் போட்டி வைத்தால்
நான் தான் ஜெயிப்பேனாக்கும்.
நீ ஆற்றங்கரையில்
உல்லாசமாய் அமர்ந்து
குளிக்கவரும் பெண்களை
எல்லாம் கவனித்ததோடல்லாமல்
சித்தியையும் புத்தியையும்
இரு தொடையிலும் அமரவைத்துகொண்டு
நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப்
பெண் கிடைக்கவில்லை என்று
முழுப்பூசணிக்காயைச் சோற்றில்
அமுக்கிப் பொய் சொல்கிறாய்.
இத்தனைக்கும் அரசன் முதல்
ஆண்டிவரை எல்லாரின்
முதல் சல்யூட்டும் உனக்குத்தான்.
எத்தனை பேருக்கு வேலைக்கு
சிபாரிசு செய்கின்றாய்.
அட்மிஷன் மினிஸ்டர்
வருமான பாதுகாப்புக் கர்த்தா
எல்லாம் நீதான்.
குருவி உட்காரப் பனம்பழம் விழுந்தகதையாய்
நீ சுண்டுவிரலைக்கூட அசைக்காமலிருக்க
உன்னால்தான் நடந்ததென்று
கூறி
தேங்காய் உடைத்துப் பாலால் தேனால்
சந்தனத்தால் அபிஷேகம் செய்கின்றார்களே
இந்த முட்டாள் ஜனங்கள்.
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.
இவர்களை முதலில் உதைக்க வேண்டும்.
இதனால் உன் சிரிப்பு
உறைந்துபோய்விட்டதோ.
சரி. உன் வாசத்தைப் பற்றி எழுது.
நாம் என்றைக்கு ஓடிப்பிடித்து
விளையாடலாம் என்பதற்கு
ஒரு கடிதம் போட்டுவிட்டு வா.
இப்படிக்கு அன்புடன்
WITH TONS AND TONS OF LUV
EVER YOURS S.T.
-- 80 ஆம் வருட டைரி
-- 80 ஆம் வருட டைரி
3 கருத்துகள்:
அட...! அருமைங்க...!
நன்றி சுரேஷ் சகோ
நன்றி டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))