என்
உயிருக்கு எத்தனை நிறங்கள்
கத்திரிப்பூவாய்
வயல்வெளியாய்
ஆகாயமாய்
எலுமிச்சையாய்
வாழையாய்
கடலாய்
என்
உயிருக்கு எத்தனை நிறங்கள்.
(வேறு
)
என்
சுயம் எங்கே
முடங்கிக்கிடக்கிறது
உன்
உயிரின்
நிறங்களுக்குள்ளா.?
மதங்களையும்
நம்பிக்கைகளையும்
விடாமல்
பற்றிக் கொண்டிருப்பதிலா?
நிலவையும்
இரவையும்
கதிரையும்
ரயிலையும்
ரசித்துக்
கவிதை எழுதுவதிலா ?
இந்துமதியையும்
சிவசங்கரியையும்
நுனிவிரலால்
நகர்த்திவிட்டுப்
பாலகுமாரனையும்
ஜெயகாந்தனையும்
புரட்டிப்
பார்ப்பதிலா ?
ப்ராப்ளம்ஸுக்கு
சொல்யூஷன்
கொடுக்கப்படும்போது
(வகுப்பில்)
தனியாக
ஸெல்ஃப் அனலைஸ்
செய்து
கொள்வதிலா ?
எதையும்
ஆகர்ஷிக்க முடியாதபோது
அலட்சியப்
புன்னகை சிந்துவதிலா ?
நாற்காலிக்கும்
மேசைக்கும் நடுவில்
காலை
நுழைத்துக் கையை முட்டுக்கொடுத்து
சொல்லடி
படும்போது எனக்கு வலிக்கவில்லையென
முகம்
மலர இருப்பதிலா ?
பாடம்
கவனிக்காமல்
நோட்டுப்
பின்புறம்
மனக்கிறுக்காய்
உளறலாய்
எழுதுவதிலா ?
எதற்கெடுத்தாலும்
மனசுள்
துன்பப்
பறவையின் விசை
முடுக்கிக்கொண்டிருப்பதிலா
?
என்னுடைய
சுயம்
எங்கே
முடங்கிக் கிடக்கிறது ?
-- 83 ஆம் வருட டைரி.
-- 83 ஆம் வருட டைரி.
4 கருத்துகள்:
உண்மையிலே தெரியலைங்க... நீங்களே சொல்லிடுங்க pl... ஹா... ஹா... (அ)லட்சியப் புன்னகை...!
அருமை வாழ்த்துகள் சகோ
ஹாஹா கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ :)
நன்றி கில்லர்ஜி சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))