எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

கறுப்பு மை.

எத்தனை ஊர்கள்,
எத்தனை வீடுகள்,
எத்தனை முகவரிகள்,
இருந்தென்ன
பெயருக்கென்று ஒரு
வாக்காளர் அட்டை,
வங்கிக் கணக்குக்காக
நாடுவிட்டு நாடு செல்ல,
சமையல் வாயு இணைப்புக்காக.
இன்னும் பயன் பலவுண்டு.
இருந்தும் ஒரு முறைகூட
நான் தீர்மானித்தது இல்லை
எனக்கான ஆட்சியாளரை.
கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு,
கறை நல்லது என்றாலும்
தப்பித் தவறியும்கூட
ஆட்காட்டி விரல்
சுமந்ததேயில்லை
அந்தக் கறுப்பு மையை.

4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அழியா 'மை' க்கு
விரல் நீட்டும் அறியா 'மை' கள்.

30 ஆண்டுகளுக்கு முன்பு கே. மஞ்சுளா என்ற சகோதரி எழுதி நான் படித்து ரசித்தது நினைவில் வந்து நின்றது.... தங்களால்....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஏன்ங்க இப்படி...?

Thenammai Lakshmanan சொன்னது…

சகோதரி மஞ்சுளாவின் கவிதை அருமை கில்லர்ஜி சகோ

ஓட்டுப் போட வாய்ப்பே கிடைக்கலைன்னு இப்பிடி ஒரு கவிதை தனபாலன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...