எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 பிப்ரவரி, 2015

ப்ரியமுள்ள உனக்கு:-



ப்ரியமுள்ள உனக்கு:- ( மீனாவுக்கு )

வார்த்தைச் சாலம்
செய்யத் தெரியாத
வாக்கியம்தான் நீ
ஆனால் உன்னுள்ளிருக்கும்
உண்மை அர்த்தம்
இரசிப்பதற்குரியது
பூசிப்பதற்குரியது.

மானசரோவரில்
பொங்கிக் குமிழியிட்டு
ஆவேசமாய் அணைக்க
முடியாது உன்னால்
ஆனால்
உன்னிருதயத்ஹ்டில்
வாயில் திரைக்காற்றில்
பறக்க உள்ளிருந்து தெரியும்
ஓடைச் சிதறலாப் பொழியும்
அன்பு சிலிர்க்க வைக்கின்றது.

இத்தனை நாளும்
உன்னை உணராத
முட்டாளாய் ஏனானேன்.?

நிலவின் பின்னால்
நின்றிருந்தாலும்
மெல்ல ஒளி காட்டும்
அமைதி நட்சத்திரம் நீ.

புங்கை மரத்தின்
பூக்களுக்குள்ளே புதைந்து
இருந்தாலும்
வித்யாசப் பூ நீ.

உன்னை இனங்கண்டு கொள்ள
ஏனெனக்கு
இத்தனை நாளாயிற்று

மழையின் துளிகளில் கலந்து
இருந்தாலும் குளிர்ச்சியைக்கூட
மெதுவாய்த் தரும்
சின்னப் பனிக்கட்டி நீ.

மாலை நேரம்
அத்தனை பறவைச் சங்கீதங்களிலும்
ரகசியம் பேசுவதாய்க்
காதருகே கிசுகிசுக்கும்
பறவை நீ.

உற்றுப் பார்த்தாலும்
மெல்ல மெல்ல வெளித்தெரியும்
இருட்டுள் புதைந்த
சின்ன வெளிச்சம் நீ.

உன்னின் பாலாவியாய்
மெல்லப் பரவும் அன்பு
என் சுவாசத்தை நிறைக்கின்றது.

சாலையோரம்
மெல்லிசாய் மூச்சுவிட்டு
வருடலாய்ப் பார்த்து
மௌனமாய் எனக்காய்த்
தவம் செய்யும் மரம் நீ.

அந்த மரத்துக்குக்கூட
நிழல் தேவைப்படும்
நீ எனக்காய்
நிழல் பரப்பியிருக்கின்றாய்.
நான் உனக்காய்
குடையாயிருக்க ஆசைப்படுகின்றேன்.

என்றும் உன்னுடைய….

-- 85 ஆம் வருட டைரி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...