பாவாடை தாவணி பழசாகி விட்டது. பாத்திரக்காரனிடம் போட மனசில்லை. ஆசிட் பட்டதால் அதன் தோள்பட்டைக்காயம். ஊசிப்பஞ்சால் நூல் மருந்து ஒற்றியும் பிசிறுபட்டு நிற்கின்றது.
உடல் தாவணி உள்ளத்தைப் போர்த்திக்கொண்டுதான் நிற்கின்றது. பாவாடையும் இறுக்க முடிந்துகொண்டுதான் இருக்கின்றது இருந்தாலும் குளிர்கின்றதே.
உள்ளமே ஒரு குட்டைப்பாவாடைதான் மகிழ்ச்சியால் விரிந்து பம்மென்று விரியும்போது. காற்றடிக்கும்போது காலில் ஒதுங்கி, மழை பெய்தால் உடலை நனைத்து மண்ணில் மெதுமெதுவாய் செருப்பணியாமல் நடந்து தேய்ந்து போகும் உள்ளமும் ஒரு பாவாடைதான். தழைந்த பாவாடைதான். பாவாடையின் கால்களாய் மண் தின்று அழுக்கு அஜீரணம் பிடிக்கும் மனமும் ஒரு பாவாடைதான்.
கல்லில் முள்ளில் பட்டுக் கிழிந்து நசிந்து திரண்டு போகும் பாவாடை ஓரம்தான் மனமும். இடுப்பைச் சுற்றி இறுக்கமாய் அணைத்து தன்னிருப்பைச் சலசலப்பால் தெரிவித்துக் கொண்டிருக்கும் மனப்பாவாடை. பாவாடையை மணந்துகொண்ட தாவணியும் இணைபிரியாமல் ஒரு புறம் மூடி மறுபுறம் கரை ஒதுங்கும்., மனமும் சிந்தனையும்போல்..
சன்னக்காற்றில் கூடச் சலசலத்துத் திரியும் பாவாடை மனம். இறுக்கப் போர்த்தலில் கூட வேர்வையைக் குத்தும் குளிரை சன்னமாய் உணரவைக்கும் தாவணி மனம்.
பாவாடை தாவணி பழசாகி விட்டது. பாத்திரக்காரனிடம் போட மனசில்லை. பத்துக்காசுக்கெடுப்பானோ எட்டுக்காசுக்கெடுப்பானோ.
--80 ஆம் வருட டைரி.
5 கருத்துகள்:
அட...! என்னவொரு பா... பாசம்...!
டைரி படித்தேன் உண்மையே..... அனைத்தும்.
சகோ எனது புதிய பதிவு ஜெர்மனி பார்ட் 3 காண்க,,,,
108 வது சரணமாய் இணைத்துக்கொண்டேன்
கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ
படித்தேன் கில்லர்ஜி சகோ
108 ஆவது மெம்பரானதுக்கு நன்றி :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))