எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 8 மே, 2016

பதில் சொல்லேன் !



பதில் சொல்லேன் !

ஏன் ஒன்றுமே கூற
மாட்டேனென்று வாயை
இறுக்க மூடிக் கொண்டுள்ளாய் ?

ஏய் !
மலட்டு மரமே !
சீக்கிரம் சொல். !

ஓ !.
எனக்கு இப்போது
தெரிந்துவிட்டது உன்
மௌனத்தின் மொழி. !
உன்னை மணக்க
இலைப்பெண்ணால்
உனக்கு வேண்டிய
வர தட்சணையைக்
கொடுக்கமுடியாது
என்பதாலா ?
இல்லையில்லை. !
இலைப்பெண்ணை மணந்துகொண்டால்
அவளைப் பராமரிக்க
(நீர் உணவு கொடுக்க )
உன்னால் முடியாது. !

ஏனெனில்
நீ
நீ..
மலட்டு மரம் என்பதுதான். (பட்ட மரம் )
அந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. 

-- 83 ஆம் வருட டைரி. 

3 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மலட்டு மரம் என்ற வார்த்தையே சுடுகிறது!

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் சுரேஷ் சகோ ஹ்ம்ம்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...