மயங்காதவன் :-
பெண்ணின் புன்னகையிலும்
பூவின் மென்மையிலும்
ஓரவிழிச் சாடையிலும்
ஒய்யாரப் பார்வையிலும்
கனியிதழ்ச் சிவப்பிலும்
கணுக்கால் வெண்மையிலும்
சிவந்த இதழ்களிலும்
சிரிக்கும் முல்லையிலும்
பனிபடர்ந்த பாதையிலும்
பார்க்கும் மலர்களிலும்
பறவை இனங்களிலும்
பச்சைப் புல்வெளியிலும்
மலையடிவாரத்திலும்
மகிழம்பூக்களிலும்
மாலை நேரத்து சன்ன
மழையின் பூத்தூவல்களிலும்
சின்ன அணில் சேஷ்டையிலும்
சிட்டுக் குருவியிடமும்
முயல்குட்டி ஓட்டத்திலும்
முகில்களின் கூட்டத்திலும்
கானமயிலாட்டத்திலும்
கன்றுக்குட்டித் துள்ளலிலும்
சேவற்கொண்டையாட்டத்திலும்
சிறுபெட்டைக் கூட்டத்திலும்
வெளிர்நீல வானத்திலும்
வேணுகான கீதத்திலும்
வேப்பமரக் காற்றினிலும்
விளையாடும் விலங்குகளிடத்தும்
குறும்பு செய்யும் குழந்தையிடமும்
மயங்காதவன் மனிதனா ?
மயங்காதவர் யாரும் உண்டோ ?
-- 80 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))