முகவரிகள் தொலைத்து
முக வரிகள் பதிக்கும்
தொலைந்துபோகட்டும்
நமது ஸ்நேகம்.
புதியபார்வைகளில் அரும்பி
புதியபார்வைகளால்
பிராண்டப்படும்
மறைந்துபோகட்டும்
நமது ஸ்நேகம்
பறத்தல்களுக்கன்றி
சுமத்தல்களுக்காய் இருக்கும்
முறிந்துபோகட்டும்
நமது சிறகு.
மழை பொழிதலுக்கன்றி
அழகுக்காய்ப் பயணம் செய்யும்
உதிர்ந்துபோகட்டும்
மேகப் பஞ்சுகள்.
உண்ணலுக்கன்றி
குத்துப்படுவதற்கென்றே கிடக்கும்
சிதறிப்போகட்டும்
இந்த நெல்
சூடலுக்கன்றி
வாடலுக்காகவே பூக்கும்
சருகாகட்டும்
இந்த செம்பரத்தைகள்.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))