மரங்களும் பேசுகின்றன. :-
உன்னுள் தெரியும் ஜாக்கிரதைத்தனம்
என்னைத் துணுக்குறச் செய்கிறது மரமே.
உன் நிழற்போர்வைகளை
பூப்படுக்கைகளை
மண்ணுக்குத்தான் பரப்புவேன்
என நீ பிடிவாதம் பிடித்தால்
யாரால் தடுக்க முடியும்.
வாழ்க்கைச் சிக்கல்களை
உன் கர நெளிவுகள்
மேடு பள்ளங்கள்
அழகாய் விளக்குகின்றன.
எனச் சொல்லும் வேளையிலே
கரங்களால் தள்ளுகிறாய்.
’குழப்பாதே குதித்திறங்கு
ஓரு என்னையும் என்
இலை உலகத்தையும்
நிம்மதியாய் இருக்கவிட்டு’
ஒட்டுக்கொண்டுவிடுவோமொ
என்ற பயத்தில் நீ
உதறுவது புரிகிறது. :) :) :)
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
2 கருத்துகள்:
அருமை...
நன்றி டிடி சகோ
நன்றி சுரேஷ் சகோ
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))