20.1.85 அன்று பாளையங்கோட்டையில் செயிண்ட் சேவியர் கல்லூரியில்
நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில் கலந்துகொள்ள 10 பேர் சென்றிருந்தோம்.
1.பத்மா – 1 ஹோம் சயின்ஸ் – ஃபேப்ரிக் பெயிண்டிங் – கூண்டில்
மிருகம் ( புலி)
2. வித்யா – 3 ஃபிசிக்ஸ் – கார்ட்டூன் – தேர்தல் களம்
& தமிழ் கட்டுரை – வாழ்வே மாயம்.
3. சி. கீதா – 3 ஆங்கிலம் – ஆங்கிலக் கட்டுரை – எலக்ஷன் ப்ராமிஸஸ்.
4. கேஆர்கே கீதா – 3 ஆங்கிலம் – கவிதை – கம்யூனிக்கல் ஹார்மனி
& சிறுகதை. ஸ்மைல் ஸ்மைல் & பீ எ வில்லன்.
5. எஸ். தேனம்மை – 3 கெமிஸ்ட்ரி – தமிழ் சிறுகதை. – அன்பிற்கும்
உண்டோ அடைக்குந்தாழ் ?
6. டி. மீனாக்ஷி – 3 ஆங்கிலம் – கவிதை. மனிதன் மாறவில்லை.
7. காளீஸ்வரி – 2 ஹோம்சயின்ஸ் – வாட்டர்கலர் பெயிண்டிங்க்
8. சிஸ்டர் கித்தேரி – 3 தமிழ் – இந்தியன் இங்க். – ஆக்ஸிடெண்ட்.
( ரயில் விபத்து ). & பென்சில் ட்ராயிங்
– ஆணும் பெண்ணும்.
ஸ்டாஃப்ஸ் இன்சார்ஜ்.
9. மிஸ். சரஸ்வதி, தமிழ்த்துறைப் பேராசிரியர்.
10. மிஸ் ஹனீஃபா ஜோஷி, இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட்
மதுரை – திருநெல்வேலி ட்ரெயினில் போனோம். திருநெல்வேலியிலிருந்து
பாளையங்கோட்டைக்கு பஸ்ஸில் போனோம். வஸந்த பவனில் காலை உணவு. ஆயிரத்தம்மா கோவில் போனோம்.
லஞ்ச் காண்டீனில் , மாலையும் இரவும் அங்கேதான் உணவு. ( தொண்டையடைச்சான் உருண்டை, நெஞ்சடைச்சான் பக்கோடா
அந்த ஊரு ஸ்பெஷல்னு சொன்னாங்க.. ஆனா சாப்பிடல )
அப்புறம் 8 மணிக்கு நெல்லை ஜங்ஷன் வந்தோம். அங்கே மிஸ் சரஸ்வதி
பால்கோவா வாங்கி கொடுத்தாங்க. சூடான அல்வா வாழையிலையில் வாங்கி சாப்பிட்டோம்.
-- 85 ஆம் வருட டைரியிலிருந்து :)
///சூடான அல்வா வாழையிலையில் வாங்கி சாப்பிட்டோம்./// திருத்தத்துக்கு நன்றி துபாய் ராஜா :)
-- 85 ஆம் வருட டைரியிலிருந்து :)
///சூடான அல்வா வாழையிலையில் வாங்கி சாப்பிட்டோம்./// திருத்தத்துக்கு நன்றி துபாய் ராஜா :)
4 கருத்துகள்:
தொண்டையடைச்சான் உருண்டை, நெஞ்சடைச்சான் பக்கோடா... ஹா... ஹா... பெயர் நல்லாயிருக்குங்க...
// சூடான வாழையிலையில் அல்வா வாங்கி சாப்பிட்டோம்.//
சூடான அல்வா வாழையிலையில் வாங்கி சாப்பிட்டோம்.
இனிக்கும் இனிய நினைவுகள்.
உடனடி நடவடிக்கைக்கு நன்றி அக்கா...
நன்றி டிடி சகோ
நன்றி துபாய் ராஜா :)
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))