எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 ஜூலை, 2015

நெல்லையில் ஒரு நாள்.



20.1.85 அன்று பாளையங்கோட்டையில் செயிண்ட் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில் கலந்துகொள்ள 10 பேர் சென்றிருந்தோம்.

1.பத்மா – 1 ஹோம் சயின்ஸ் – ஃபேப்ரிக் பெயிண்டிங் – கூண்டில் மிருகம் ( புலி)

2. வித்யா – 3 ஃபிசிக்ஸ் – கார்ட்டூன் – தேர்தல் களம் & தமிழ் கட்டுரை – வாழ்வே மாயம்.

3. சி. கீதா – 3 ஆங்கிலம் – ஆங்கிலக் கட்டுரை – எலக்ஷன் ப்ராமிஸஸ்.

4. கேஆர்கே கீதா – 3 ஆங்கிலம் – கவிதை – கம்யூனிக்கல் ஹார்மனி & சிறுகதை. ஸ்மைல் ஸ்மைல் & பீ எ வில்லன்.

5. எஸ். தேனம்மை – 3 கெமிஸ்ட்ரி – தமிழ் சிறுகதை. – அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ?

6. டி. மீனாக்ஷி – 3 ஆங்கிலம் – கவிதை. மனிதன் மாறவில்லை.

7. காளீஸ்வரி – 2 ஹோம்சயின்ஸ் – வாட்டர்கலர் பெயிண்டிங்க்

8. சிஸ்டர் கித்தேரி – 3 தமிழ் – இந்தியன் இங்க். – ஆக்ஸிடெண்ட். ( ரயில் விபத்து ).  & பென்சில் ட்ராயிங் – ஆணும் பெண்ணும்.

ஸ்டாஃப்ஸ் இன்சார்ஜ்.

9. மிஸ். சரஸ்வதி, தமிழ்த்துறைப் பேராசிரியர்.

10. மிஸ் ஹனீஃபா ஜோஷி, இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட்

மதுரை – திருநெல்வேலி ட்ரெயினில் போனோம். திருநெல்வேலியிலிருந்து பாளையங்கோட்டைக்கு பஸ்ஸில் போனோம். வஸந்த பவனில் காலை உணவு. ஆயிரத்தம்மா கோவில் போனோம். லஞ்ச் காண்டீனில் , மாலையும் இரவும் அங்கேதான் உணவு.  ( தொண்டையடைச்சான் உருண்டை, நெஞ்சடைச்சான் பக்கோடா அந்த ஊரு ஸ்பெஷல்னு சொன்னாங்க.. ஆனா சாப்பிடல )

அப்புறம் 8 மணிக்கு நெல்லை ஜங்ஷன் வந்தோம். அங்கே மிஸ் சரஸ்வதி பால்கோவா வாங்கி கொடுத்தாங்க. சூடான அல்வா வாழையிலையில் வாங்கி சாப்பிட்டோம்.

-- 85 ஆம் வருட டைரியிலிருந்து :)  

///சூடான அல்வா வாழையிலையில் வாங்கி சாப்பிட்டோம்./// திருத்தத்துக்கு நன்றி துபாய் ராஜா :)

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொண்டையடைச்சான் உருண்டை, நெஞ்சடைச்சான் பக்கோடா... ஹா... ஹா... பெயர் நல்லாயிருக்குங்க...

துபாய் ராஜா சொன்னது…

// சூடான வாழையிலையில் அல்வா வாங்கி சாப்பிட்டோம்.//

சூடான அல்வா வாழையிலையில் வாங்கி சாப்பிட்டோம்.

இனிக்கும் இனிய நினைவுகள்.

துபாய் ராஜா சொன்னது…

உடனடி நடவடிக்கைக்கு நன்றி அக்கா...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி துபாய் ராஜா :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...