எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 ஜூலை, 2015

இந்த நிமிடத்தை மெல்லப் பருகு



கண்ணுக்குள்ளே கண்ணீரைப்
பிரசவிக்கவும் சமாதிகட்டவும்
தெரியுமா உனக்கு

அதீதப் பரவஸத்திலும்
அதீதத் துக்கத்திலும்
அரற்றிக்கொட்டி அழுதுவிடு

உன்னுள்ளே ஏன்
ஒரு கண்ணீரின்
வாழ்க்கைச் சக்கரத்தைப்
புதைத்துப் போடுகிறாய்

செய்யமுடியாமல் போன
வாய்ப்புக்களுக்காக
முடிந்தவரை துக்கப்பட்டுவிடு
அடுத்தமுறை அதன் நிழல்
உன் கனவில் கூட வராதவாறு.

செய்யமுடிந்தவைகளையும்
கிடைத்த சிநேகிதங்களுக்காகவும்
முடிந்தவரை சந்தோஷப்பட்டுவிடு
அடுத்த நிமிடம் எதுவும் நேரலாம்
என்ற கான்ஷியஸ்னஸ் உடன் இரு.
சந்தோஷம் வந்தால் முடிந்தவரை
இறைச்சலிட்டு அனைவருடனும்
பங்கிட்டுக்கொள்.

அடுத்தமுறை உன்னால்
கத்தமுடியாமல் போகலாம்
சந்தர்ப்பம் வராது போகலாம்
ப்ராங்காய்ப் பேசமுடியாமல் போகலாம்
உன் சவுண்ட் பாக்ஸே கெட்டுப் போகலாம்.

எதிர்காலத்தை யோசிக்காமல்
சுயப்பிரஞ்ஞையுடன் இரு
மண்டையைத் துளைத்துக்
கேள்விகள் தொடுத்துத்
தன்னுள்ளே தோண்டித்
துருவி மெலிந்து
சலித்துப்போடுவதை
விட்டுவிடு.

பறவையின் இறக்கை அசைப்பான
இந்த நிமிடத்தை
மெல்லப் பருகு.

-- 85  ஆம் வருட டைரி :) 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மையிலேயே இப்படித் தாங்க இருக்க வேண்டும்... பல நேரங்களில் அனுபவித்தும் உள்ளேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...