எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 ஏப்ரல், 2016

உடையட்டும் உன் விலங்குகள் :- 2



உடையட்டும் உன் விலங்குகள் :- 2

பெண்ணே !
பேதைப் பெண்ணே !
உடையட்டும் உன் அடிமைத்தளைகள்.
களைந்துவிடு
உன் இதயச் சுமைகளை. !
அந்த இடிகளைத் தாங்க
உன் பெற்றோரால்
இடிதாங்கியாய்
இருக்க முடியுமா ?
இந்த அடிமைத்தனத்திலும்
உனக்கு ஒரு சுகமா கிடைக்கிறது ?
நீ ஆதியில் அன்னியன்
ஆதிக்கத்தில்
கொடுமைப்பட்டு
அடிமைப்பட்டுக் கிடந்தாய்.
இன்று
கொண்டவனின் ஆதிக்கத்தில்
கொடுந்தளையால்
கட்டப்பட்டுள்ளாய். !
பெண்ணே !
என்று தீருமுன் அடிமைத்தனம் ?
கன்னத்தைக் கழுத்துப்புறத்தைப்
பின்முதுகை முன்வயிற்றைப்
புறங்கையை மார்பகத்தைக்
கெண்டைக்காலை
வரிப்பாலங்கள் இணைக்கின்றன
நெஞ்சில் பசுமை மாறாத இரணம்
இரண சிகிச்சை நடைபெறுவது
சூட்டுக் கோலினாலா ?
பணத்திற்கும் பொருளிற்கும்தானா எல்லாம் ?
பணம் என்றால்
பிணமும் வாயைத்
திறக்குமாமே !
சாதாரணம்.
ஒரு மனிதன் தானேயிவன். !
இவனால் என்ன செய்ய முடியும் ?
என்று தீருமுன் கோழைத்தனம்.
உடையட்டும் உன் விலங்குகள்
தடைக்கல்லாய்
இடைச்சொருகலாய் யாரிருந்தாலும்
உடையட்டும் உன் விலங்குகள்.
உடைத்துவிடு உன் தளைகளை

-- 83 ஆம் வருட டைரி. .

3 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

உணர்ச்சிகரமான வரிகள் அருமை சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கில்லர்ஜி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...