பொழுதைச் சுருட்டிக்
கக்கத்திலிட்டுக்கொண்டு
என்னைச் சுற்றிலும்
வேலைகள் வேலைகள் வேலைகள்.
முதுகிலேறிச் சவாரி செய்யும்.
கெக்கலிக்கும்
அவைமுன் நாயாய்க்
கொசுவாய் நான்.
என்னைப் பட்டமாய்ச்
சிதறடிக்கும் காற்றாய்
வேலைகள்.
வெறுமைப் புள்ளியாய்
நான் அமர்ந்திருக்க
சிலுவைப் பாரங்களாய்
முதுகுபிளக்கும்
வேலைகள் வேலைகள் வேலைகள்.
--85 ஆம் வருட டைரி
--85 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))