எதுக்காக கூட்டில் அடையணும். எங்களுக்கப்புறம் வர்றவங்களும்
பிள்ளைங்கதானே. புலியா சிங்கமா வருது.
எந்தக் கதையும் முற்றுப் பெறுவதில்லை. வாழ்க்கையைப் போல.
ஒரு ஜீவன் வாழ்ந்ததைப் போலத்தான் வரும் பரம்பரைகளும் வாழ்கின்றன. முன் ஜென்மத்தில்
பிறந்து வளர்ந்து மணமுடித்துவிட்டோம் என்பதால் அடுத்த ஜென்மமெடுக்கும்போது ( ஆத்மா
– ACCORDING TO HINDU THEOLOGY பிறவி எடுத்துக்கொண்டே இருக்கும்.) வேறு விதமாக வாழ்வதில்லை.
அன்பு என்பது உயிர்த்துக்கொண்டே இருக்கக் கூடிய ஒன்று.
அதன் பரிணாமங்கள் சில சமயங்களில் சில பேர்களுக்குப் புரிவதில்லை. அவ்வளவுதான்.
யாரும் யாரையும் பர்ப்பஸா மறக்கிறதில்லை. அது நேர்ந்துவிடுகிறது.
( தாங்க்ஸ் டு மீனா )
பாட்டியும் நானும் நானும் பாட்டியும் திரும்பத் திரும்ப.
மழையாய் வர்ஷித்து ஒன்றுமேயில்லாமல் வெளுத்து விழிக்கும் ஆகாயம் போலிருக்கேன்.
எல்லாரும் இணைய வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தது போல இது
என்ன’ விலகி நின்று மட்டுமே பார்க்க உத்தேசம் ( இது சரிதான் ) – உறுதி ( இது தவறு ).
தந்த ஒவ்வொரு எழுத்துத் துணுக்கையும் நினைவுச் சாகரமாய்ப்
பதுக்கி வைத்து இருக்கேன்.
ஒவ்வொருத்தரும் மஹா சமுத்திரம் மாதிரி. அலையில் நின்று சந்தோஷிக்கலாமே
தவிர ஆழம் பார்க்கணுமின்னு ஆசைப்படுறது தப்பு. அலையாவது வந்துட்டுப் போறதேன்னு நெகிழ்ச்சிதான்
எனக்குள். அதிலேயே செயலற்றுப் போகின்றேன். நான். ALL MUST KNOW THEIR LIMITATION
IN EVERY ASPECTS.
லேசாய் மரபுக் கவிதையின் சாயல் ஒட்டிக்கொண்டிருக்குமோ என்ற
எண்ணம் எனக்குள்.
-- 85 ஆம் வருட டைரி :)
-- 85 ஆம் வருட டைரி :)
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))