அலுமினியத் தூக்குச் சட்டி:-
பானையில் கையவிட்டுத்
துழாவித் துழாவிப்
பொறுக்கிப் போட்டுத்
தண்ணியையும் ஊத்தி
மிளகாய் வச்சு
அருமையான புருசனின்
கையில் வச்சாள்
ஆயிரங்கண்ணாள்.
பேரைப்போல
உடுத்திருந்த ஆடையும்.
கையில் வாங்கிவந்து
களத்துமேட்டின்
புங்கை மரத்துக்கு
காது டோலக்குப்
போட்டுவிட்டான்
காற்று வீசியபோதெல்லாம்
கஞ்சித் தண்ணி சலசலக்க
தூக்குச் சட்டியின் கைப்பிடி
‘ணங் ணங் ‘ கிட்டது
மதிய வெய்யிலில்
சட்டிக்கும் மூடிக்கும்
தற்காலிக விவாகரத்து வழங்கிவிட்டு
அவன் கஞ்சியள்ளிப் பருக
தூக்குச் சட்டி சத்தம் போட்டது.
”அடப்பாவி.. இவ்வளவு நேரம் சுமந்தேனே
என்னைக் கேட்டியா
சாப்பிடுறியான்னு ஒரு வார்த்தை.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))