கத்திரிப்பூத் தாவணி :-
காற்றலைகளில் நர்த்தனமிட்டு
நைட்லாம்பின் நீல ஒளியில்
பூதநிழலைப் பிரசவித்த களைப்பில்
தூசியாடை உடுத்திருந்த
அந்தக் கத்திரிப்பூத்தாவணி
லேசாய் எரிச்சற்பட்டது.
என்ன பெண் இவள்
என்னை மார்பில் தவழ
உரிமை தராவிட்டாலும்
அவள் பாதம் படும் தரையை
மெழுகவாவது எடுத்துப் போடக்கூடாதா. ?
அவள் கரத்தை ஸ்பரிசிக்கலாமே என்று.
-- 82 ஆம் வருட டைரி.
-- 82 ஆம் வருட டைரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))