இலவு காத்த கிளி :-
வேலையற்ற விடலைப் பையன்கள்
ஞாயிற்றுப் பொழுதுகளில்
சாயங்கால வெய்யில்களில்
க்ரிக்கெட் விளையாடியபோது
ஐ ஏ எஸ் வீட்டு
மாடிச் சன்னல் கண்ணாடி
திட்டித் தீர்த்துச்
சத்தம் போட்டது.
ஒவ்வொரு முறையும்
பந்துப் பெண் வரும்போது
என்னை முத்தமிடுவாள் என்று
நான் இலவுகாத்த கிளியாகிப் போயிருக்க
இந்தச் சிறுக்கி
அந்தக் குமாஸ்தா வீட்டு
மரக்கதவுப் பயலைத்தான்
எப்போதும் முத்தமிடுகிறாளாமே என்று.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))