அவள் சரஸ்வதியாம். :-
ஆசையாக வைத்த பெயர் சரஸ்வதியாம். !
கீற்றுக் குடிசையில்
கீரை ஆய்ந்துவிட்டுக்
கொட்டகையில் கத்திய
மாட்டுக்குக் கொஞ்சம்
தீவனம் போட்டுவிட்டு
சாணி அள்ளிக் கூடையில் அமுக்கிவைத்துக்
கழனித் தண்ணியைக்
கிடாவுக்கு ஊற்றிவிட்டுத்
திரும்பியபோது
சோறு பொங்கிப்போய்
அடுப்பெல்லாம்
புகைப்பூ. பூக்க
கண்ணெரிச்சலுடன்
சின்னது பாலுக்குப் படுத்த
சாயந்திரம் எந்தச்
சாராயக் கடையில் கிடப்பானோ
கணவன் என்று மனமும்
எரிந்துபோய்க்கிடந்த
அவள் அம்மா கண்ணாம்பா கத்தினாள்.
“ அடி. சனியனே
அடுப்பைக் கவனிக்காம
அங்கென்ன கதையளப்பென்று..”
அவளுக்கு ஆசையாய்
வைத்த பெயர் சரஸ்வதியாம்.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))