பட்டங்கள் :-
காலேஜில் ஸ்ட்ரைக் நடத்தி
லைப்ரரி ஜன்னல்களைச்
சன்னமாக உடைத்து
விடுதியின் சாப்பாட்டறையைப்
போர்க்களமாக்கி
காட்டை பார்ட் பார்ட்டாகக்
கழட்டிப் போட்டு
மரத்துக்கு மரம்
வாசகங்கள் கொண்ட
சார்ட்டினால் வேஷ்டி கட்டி
பெற்றோர் நம்பிக்கை நட்சத்திரமாய்
நினைத்துக் கற்றையாய்க்
கரன்ஸி நோட்டுக்களை அனுப்ப
காண்டீனில் கொட்டமடித்துப்
பகல் காட்சிக்குப்
பன்னிரண்டரைக்கே ப்ரஸண்ட் ஆகிச்
சீட்டு ரிசர்வ் செய்து
சினிமா க்ளாஸ் அட்டெண்ட் பண்ணி
ஐஸ்க்ரீம் செமினார் படித்து
பிரின்ஸ்பால் அர்ச்சனைகளில்
அசைன்மெண்ட் எழுதி
ஆறு செமஸ்டர்களில்
ஆறரை அரியர்ஸ் வைத்துப்
பாஸ் செய்து பெற்ற பட்டத்தைப்
பெட்டியில் பூட்டி
பரணில் போட்டிருந்தேன்.
பையன் அடம்பிடித்தான்
அம்மா அம்மா
பரணில் பட்டம் பட்டம்.
வாலு ஒட்டி நூலு கட்டித்
தயாரானான்.
ஏதோ என்னாலான உதவி
ஒரு பட்டத்தை எடுத்து
மற்றதை ஒட்டி வாலாக்கினேன்.
பட்டம் ஜோராய்ப் பறந்தது.
பையனின் அழுகை அமர்ந்தது.
--- 85 ஆம் வருட டைரி.
--- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))