வஸந்த நிகழ்வுகள். :-
உன்னை நினைக்கும்போதெல்லாம்
ஸ்நேக ஜலத்தின் தளும்பலில்
தடுமாறிப்போய் கனவில் ததும்பி
பரவஸித்துப் போகிறேன்.
இந்தப் பரவஸத்திற்கு எல்லை வகுக்க
என்னால் இயலவில்லை.
பொங்கிப் போகும்போதெல்லாம்
அது வெளியிலும் கொஞ்சம் கொஞ்சம்
வழியவிட்டுச் செல்வதால்
நான் பிறரிடம் என்னை
வெளிப்படுத்தி விடுகிறேன்.
உன்னை என்னுள்
புதைத்து நிறைத்து வைத்திருப்பது
எனக்கு மட்டுமே தெரிந்த நிகழ்வு
என்று நினைத்திருந்தேன்.
எனக்கு முன்னமேயே அதைப்பற்றி
என்னைச் சார்ந்தவர்கள்
அறிந்து வைத்திருப்பதைப்
பார்த்தபோதுதான் புரிந்தது.
நான் எவ்வளவு
ரகசியம் காக்கத்தெரியாதவளென்று.
---- 84 ஆம் வருட டைரியிலிருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))