ஹாஸ்டலோரத்து இரயில் பாதை :-
இந்தப் பெட்டிகள் கைகோர்த்து
ஓடிவருகையில் நான்
பரவஸித்துப் போகின்றேன்.
இதென்ன. ? வாக்குக் கொடுத்த
இராமனாட்டம். ?
யாரிடம் செய்த
சத்யப் ப்ரமாணம் இது ?
கலியுகத்தில் பிறந்துவிட்டதால்
நீயும் அசத்யம் செய்யக் கற்றுக் கொண்டாயோ ?
டீசலைக் குடித்துக் குடித்து
மூளை குழம்பி விட்டதா
தடம் மாற்றமா. ?
என்னுள் நீ எவ்வளவு
ஸ்நேக மொட்டுக்களைப்
புஷ்பிக்கச் செய்திருக்கிறாய் நீ !
ஓவென்று கத்தி ஓடிவந்து கட்டிப்
புன்னகைக்கும் ஸ்நேகிதியைப் போல.
பிரிந்த மனங்களை ஒட்டுவது போல
இரு தண்டவாளங்களுக்கிடையில்
ஓர் அன்புப் பாலமாய்.
ஓ
எவ்வளவு இனிமையான
ஸ்நேகம் நமது.
இந்தக் குட்டி ஸ்நேகங்களை
இந்தப் பரவஸ லோகங்களை
இந்தச் சிலநொடி இன்பங்களை
இன்னும் ஒன்றரை ஆண்டுகளில்
இழந்துதான் ஆக வேண்டுமென
எண்ணும்போது
இதயத்தின் ஓரப்பாதைகளில்
உன் நினைவுத்தடம்
இணைகோடுகளாய்
இரு நீண்ட பயணங்களாய்
பக்கத்திருந்தும் தொட்டுக்கொள்ள முடியா
ஏக்கங்களாய் இன்னும் வலிக்கிறது.
-- 84 ஆம் வருட டைரி.
-- 84 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))