இது வேதனையானதுதான்
ஒரு கவிஞன்
சுண்டுவிரல் நுனியில்
அலட்சியப்படுத்தப்படுகிறபோது
அவன் மனம் நத்தையாய்
வருத்தக் கூட்டுக்குள்
சுருண்டு அழும்போது
அது
மனம் பிசையக் கூடியதுதான்.
கண்கள் பொங்க
அலட்சியப்படுத்தப்பட்ட
படைப்புகளோடு படைப்பாக
கவிஞனும் நிற்கிற போது
அது சொல்லமுடியாத துயரம்தான்.
-- 82 ஆம் வருட டைரி.

1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))