எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 26 அக்டோபர், 2015

மரத்தின் நிழலில் சில நேரங்கள்



மரத்தின் நிழலில் சில நேரங்கள் :-

சில ஒளிக்கற்றைகள் பிரிகின்றன.
மரங்களின் இலைக்குடைத் தடுப்பினால்
சில ஒளிக்கற்றைகள் பிரிகின்றன.

இவை மரத்தின் கிழவாய்களாம்.
மரக்குழந்தையையீன்ற மண் தாய்க்கு
ஆதவக் கணவனின் முத்தக் காணிக்கைகளாம்.


மரங்களின் பட்டைகளில்
இந்த கவிச்சிற்பங்களைச்
செதுக்கியது யார் ?

மலைகளின் மனக்குகைகளில்
கவிதை ஒளியைப்
பதித்தது யார். ?

ஆயிரம் முத்தங்கள் :-

நெருப்பின் பவழ இதழ்கள்
உடலில் பூப்பொறித்து
ஆயிரம் முத்தங்கள் 
மரக்கிளைகள் பற்றியெரிய..

-- 85 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ் சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...