இனிமையான நீயே..!
கடல் நீலம்.
வான் நீலம்
சங்குப்பூ நீலம்
கண்ணன் நீலம்
நீயும் நீலமலர்.
எனக்குப் பிரியமான
வெளிர்நீலப் புஷ்பம்.
என்னைப் பரவஸிக்கும்
கருநீல வைரம்.
உன் பற்கள் வெண்மையானவை
மனத்தைப் போலவே.
எனக்குப் பிடித்தமான
ஊதாப்பூ நீ.
வண்டுவந்து ஊதா பூ.
ஊதிப் போகாத ஊதா பூ
நீ என்றும் பசுமையானவள்
உன் நிறம் எலுமிச்சை மஞ்சள்
உன் இதழ்கள் ஆரஞ்ச்
உன் இதழ் கள் ஆரஞ்ச்
நீ வெட்கப்படும்போது
சிவப்புப் பூக்களை
உன் இரு கன்னங்களும்
என்னமாய்ச் சொரிகின்றன.
உன்னுள் ஏழும் அடக்கம்
நீ ஒரு வானவில்தான்
ஒப்புக்கொள்கிறேன்
இனிமைகளுடன் நானே.
-- 83 ஆம் வருட டைரி
-- 83 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))