மந்தைகளை எழுப்புவோம் :-
மனித மந்தைகள்
உலக மரத்தின்
அறியாமை நிழலுக்குள்
தூங்கிச் சுகிக்கின்றன.
தழும்பேறித் தடுமாறும்
கால்களுக்குத்தான்
இந்த நிழல்வீடு
கட்டப்பட்டதேயன்றிச்
சோம்பேறி மந்தைகளுக்கல்ல.
நல்ல மேய்ப்பராய்
நாம் இல்லாவிடினும்
சிறந்த வழிகாட்டியாகவாவது செல்வோம்
வினாத்தாளை விழித்துப் பார்க்கும்
சிறுவனைப் போல
கணைகள் தொடுக்கப்படுகையில்
தடுமாறிடக்கூடாது
இந்த மந்தைகள்.
அர்ச்சுனனின் கண்ணுக்கும்
அம்புக்கும் தெரிந்தது
பறவையின் கழுத்துத்தானே தவிர
மரமோ கிளையோ அல்ல.
எனவே உறங்கிக்கிடக்கும்
மந்தைகளை உணர்வூட்டும்
கடமையைச் செய்வோம்.
நேற்றையப்பூ வாடிவிட்டது.
நாளை என்னும் தாமரைப்பூ
உதயத்தின் பின் தான் மலரும்.
ஆனால் இன்று எனும் பூ
ஆனால் இன்று எனும் பூ
நம்கையில் மலர்ந்திருக்கிறது.
அது வாடுவதற்குள்
மந்தைகளைத் தட்டியெழுப்பும்
கடமையைச் செய்வோம். !
வாரீர் !!
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
4 கருத்துகள்:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அருமை! வாழ்த்துக்கள்!
உறங்கிக்கிடந்தால் மந்தைகளை
தட்டியெழுப்ப முயலலாம்...
மயங்கிக்கிடக்கும் மந்தைகளை
என்ன செய்து உயிர்த்திட?...
இன்றைய காலச்சூழலுக்கு ஏற்ப பல வருடங்களுக்கு முன்னமே எழுதியிருக்கும் உங்கள் ஞானத்திலிருந்து விளங்குவது ஒன்றுதான்... சமூகம் இன்னும் மாறவேயில்லை...
நன்றி சுரேஷ் சகோ
நன்றி சாய்ரோஸ்
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))