உன் நினைவின் நுனிப்புகள்தான்
என் அசைபோடும் நேரங்கள்.
நான் குளிர்காயும் ஓரங்கள்
இந்த வறண்ட பாலைவனமே
நான் செங்கோல் செலுத்தும்
இராஜபுதனங்கள்
கடும் வெயில் நேரங்களில்
கானல் நீராய்த் தென்படுவது
உன் அன்பின் அழைப்புக்கள்.
என் பேனா ஒட்டகங்கள்
தாகத்துடன் வேகமாக
நடைபோடப் போட
அதனால்தானோ நீ
தூரமாகிக் கொண்டிருக்கின்றாய். ?
நானுன்னை அறிய ஆவலுறுகின்றேன்.
என்னை மறந்துவிட்டாயா என்றல்ல
யாரையாவது நினைக்க ஆரம்பித்துவிட்டாயா என்று..
-- 85 aam varuda diary.
-- 85 aam varuda diary.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))