எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்
கூண்டுக்குள் மூளைப்பறவை அடைத்து
சிதறித் தவிக்கும் நீ
எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்
பறவைகள் ஆலமரங்களில்
கூடு கட்ட கூடுதோறும்
குந்திச் செல்லும் பறவையாய் நீ
எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்
கிளிகள் மூக்கால்குத்திக்
கொட்டை தின்னும்., ஆனால்
மனசு குத்தி வேதனை தின்னும் நீ
எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்
முள்முடிகளைச் சுமக்க வைத்து
ஆணிகளால் அறைந்து தள்ளும் நீ
எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்
கொடுத்தலின் இன்பத்துக்கன்றி
கர்வத்தின் செருக்காய் வெளியிடும் நீ
எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்
தையல் ஊசிகளைப் போல
மனத்துணியில் ஓட்டைகள் மட்டும்
போடத் தெரிந்த நீ
எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்.
---- 85 ஆம் வருட டைரி
---- 85 ஆம் வருட டைரி
3 கருத்துகள்:
ஆம் எனக்கும் வேண்டாம்
அந்தச் சினேகம்
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))