சந்தன மின்னல்கள்:-
அந்தச் சந்தன மின்னல்
ஜன்னல் கம்பிகளைச்
சுட்டுச் சென்றது
அதன் வெம்மையில்
கண்கூசிப்போனான்
சைக்கிள் நாயகன்
மணியோசை கேட்ட
போழ்தெல்லாம்
சந்தன மின்னல்
ஜ்வல்லித்தது
சாம்பல் நாயகன்
உயிர்த்தெழுந்தான்
உற்சாகக் கவிதை வடித்தான்
எத்தனை நாள்தான்
தரிசனம் கொடுப்பது
எனப் பின்னினாள் தேவி
வரத்தை வேண்டிய பக்தன்
தட்சணை வேண்டிப் பூசாரியானான்
உள்ளத்தைப் பூசைசெய்யவேண்டியவன்
உடலை ஆராதிக்கும் தாசனானான்
தண்ணீரில் அவன் சுயதரிசனங்கள்
தெளிவானபோது
சபலங்கள் சருகாகிக் கொண்டிருக்க
அந்தோ ! ஒரு சந்தன மின்னல்
அறுந்து விழுந்தது.
ஜன்னல் கம்பிகள் நிரந்தமாய்க்
கதவோடு கதைபேசிக் களித்தன.
-- 82 ஆம் வருட டைரி.
-- 82 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))