புதிய நடைகள்:-
இந்த நடப்புகள்
இராசதமாகவோ
தாமதமாகவோ
நடை போட்டாலும்
முடிவதென்னவோ
சாத்துவீகத்தில்தான்.
சில மௌன எதிர்பார்ப்புகள்
புரையோடிப்போனவை.
எதிர்பார்க்கப்படாமல்
கிடைக்கும் பரிசுக்கு
இன்பம் உய்த்துணரப்படாது.
இந்தப் புதிய நடைகள்
மிகவும் ஏற்கப்படக்கூடியவைதான்.
ஸ்வரங்கள் கலப்படமாகும்போது
சுருதிபேதம் சுவையானதோ
ஆதியே கலப்படம் என்னும்போது
அந்தத்துக்கு என்ன சுத்தம்
வேண்டிக்கிடக்கிறது ?
இவை இவை
புதிய நடைகள்
புதிய கோணங்கள்
நிர்வாணித்தால்
புரிந்துகொள்ள முடியா
புதிய குழப்பங்கள்.
இவை இப்படியே விடப்படவேண்டியவை.
ஏனெனில் இவை
புது உலகின் புதிய நடைகள்.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))