குளிர் நெருப்புகள்:-
அக்கினிப்பரவல்களில்
அர்த்த இரவுகளில்
பனியின் அலைச்சல்களில்
பாதப் பிளவுகளில்
குடிசைகளின் மூலையோரத்தில்
குளிரும் சுடும்.
அனாதைச் சோகங்களில்
அரைநாள் பட்டினியில்
மழையின் குதியாட்டங்களில்
உடலின் விறைப்புகளில்
உடைகளின் பற்றாக்குறைகளில்
மனசின் மூலைகளில்
குளிரும் சுடும்.
யதார்த்தத்தின் கனங்களில்
பட்சிகளின் நடுங்கல்களில்
ஆத்மாவின் ஈனசுரங்களில்
மனசின் சுயகட்டுப்பாடுகளில்
குளிரும் சுடும்.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))