இந்த அழுத்தம் அவளுள் எரிச்சலை மூட்டியது. என்னவொரு அவமதிக்கும்
மௌனம். ? எப்போதும் கலகலவென்றிருக்கத்தான் அவளுக்குப் பிடிக்கும்.
நம்மை நேசிக்கின்ற எவரையும் நம்மாலும் நேசிக்கமுடியும் என்ற
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகள் அவளுள் ஒரு சினேக ஜலத்தைத் தளும்பவிட்டவை.
க்ளிப் போட்டு ஒட்டவைத்த மாதிரியான புன்னகையை அவள் சிதறவிட்டதில்லை.
மனசு முழுதும் பூத்துப் போய் ஸ்வர சுருதியுடன் ஜலதரங்க லயிப்புடன் எதிரில் இருப்பவரையும்
சிடுமூஞ்சியானாலும் கோபத்தில் இருந்தாலும் உற்சாகம் தொற்றிக்கொள்ளவைக்கும் நகைப்பொலியின்
அலைகள் அவளுக்கே சொந்தமானவை.
-- 83 ஆம் வருட டைரி.
-- 83 ஆம் வருட டைரி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))