மனமும் மாணவியும் :-
எண்ணக் கூண்டுக்குள்
படபடக்கும் பறவைகள்.
இதய உலகத்தில்
உலா வரும் ராணிகள்.
சிந்தனைச் சோலையில்
சிலைவடிக்கும் சிற்பிகள்.
அன்பெனும் சாட்டைகொண்டு
அனைவரையும் அடங்கச்செய்ய
விரும்பும் சர்வாதிகாரிகள்.
உலகத்தை மாற்றுவதாய்
வரதட்சணையைத் தீண்டாமையை
வேலையில்லாத் திண்டாட்டத்தை
பெண் எரிப்பை ஒழிப்பதாய்த்
தடுப்பதாய் மனதுக்குள்
அரசியல்வாத சபதங்கள்.
நனவுலகின் நிஜங்கள்
வெம்மையாய்ப் பொசுக்குகையில்
செம்மலாகிவிடும் பூக்கள்.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))