ஒரு கதையாசிரியனுக்கு ( சமர்ப்பணம்):-
28.11.84.
கிட்டவா
அறைஞ்சுப்பிடுவேன்.
யோசனை செய்யாதே
யோசனை செய்யாதே.
பெண்ணென்ன
அலைந்துகொண்டா இருக்கின்றாள்
எல்லாப் புஷ்பமுமா
தினம்தினம்
பனிவாங்கிக் கட்டிக்கொள்கிறது
உதைப்பேன்
ஒழுங்காகச் சொல்.
லயம் மாறாதே
தடத்தின்மேல்
தடம்பதிக்காதே
உன்னைப் பிடிக்கின்றது
இல்லையில்லை
உன்னைப் பிடிக்கவில்லை.
எல்லாவற்றிலும் ஏன்
உன் வெள்ளாடு வேலி
தாண்டுகிறது.
உனக்கு வேலிமேல்
பிரியமில்லையா. ?
தப்பாய் நியாயம்
கற்பிக்கமாட்டேன்
எங்கே இன்னொருதரம் சொல்.
நான் உன்னைவிடப்
பரபரப்பது தெரியாது.
உத்தமமாய் எழுதும் நீ
ஊத்தைபிடித்தமாதிரி
எழுதுவாயா
உம் அருகே வா
அடிக்கின்றேன்
தடத்தின்மேல்
தடம் பதிக்காதே
உன்னைப் பிடிக்கின்றது
இல்லையில்லை
உன்னைப் பிடிக்கவில்லை.
உன் சுயரூபம்
எப்படி இருக்கும். ?
கற்பனை பண்ணத்
தயாரில்லை
நேரிலும் நீ
இப்படித்தானா ?
தப்பாய் இருந்தால்
மன்னிக்க மாட்டேன்.
சூடு போடுவேன்.
கொஞ்சம் பக்கம்வா
புரட்டிப் பார்க்கிறேன்.
-- 82 ஆம் வருட டைரி.
-- 82 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))