மலை முகடு:-
பொதிக்குள் அமுக்கின
கோழிக் குஞ்சாய்
மெல்லத் திமிறும்.
குளிரடைத்து
மூக்குத் துறுதுறுக்கத்
தூவலாய்த் தும்மும்.
ஒட்டடைக்குச்சிகளாய்
முடியைக் கோரையாய்ச் சிலுப்பும்.
மரகதங்கள் முளைத்ததுபோல்
இஷ்டப்பட்ட இடங்களில்
இல்லங்கள் பூத்திருக்கும்.
மலைமுகடு
இல்லங்களின் குடுமியில்
சுருட்டைப் புதைத்துப்
புகைத்துக் கொண்டிருக்கும்.
நெயில் பாலிஷ் பூசிய
விரல்களைப்போல்
மனிதர்கள் சிவந்து
சிறுத்துத் தெரிவார்கள்
அடிவாரத்தில்.
தீப்பெட்டிகளை அடுக்கிக்
கட்டினாற்போல் வீடுகள்
சேற்றுச் சகதிகளில்
தேவதைகளின் வாசங்கள்.
பாதப் படிவங்கள்.
நெருப்புச்சட்டியைச்
சுமந்து சுமந்து
புறக்குளிர் சுட்டெரிக்க இயலாத
கடினத் தடங்கள்.
மரத்துப் போன
மறந்துபோன குளிர் நெருப்புகள்.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))