எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 ஜூன், 2013

எளிய மனிதர்களும், ஊர்களும்.

எளிய ஊர்களைப் போலவே
இருக்கின்றார்கள்
எளிய மனிதர்களும்.
நதிக்கரையோர
சணல்படுதா குடிசைகள்,
புட்டாமா அடித்துப்
பொட்டுவைத்த குழந்தைகள்,
ஏதோ ஒரு போராட்டக்கல்
உடைத்த ஜன்னலுடன் பேருந்து,
புகையிலை வாடையுடன் வரும்
பழக்கூடைக்காரி,
வீசும் கொட்டைக்கோ பழத்துக்கோ
தோப்பிலிருந்து வால் தூக்கி
சலாமடிக்கும் அணில்கள்,
குழையக் குழையச் சேறோடு
மணக்கும் சம்பா வயல்கள்,
எளிய மனிதர்களைப் போலவே
காவி காட்டிச்  சிரிக்கின்றன
எளிய ஊர்களும்..

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்படியே கிளம்பி எங்க ஊருக்கு வாங்க... ஹிஹி...

எளிமையும் உண்டு... உண்மையான திருப்தியான சந்தோசமும் உண்டு...

A. Manavalan சொன்னது…

குழையக் குழையச் சேறோடு
மணக்கும் சம்பா வயல்கள்,
எளிய மனிதர்களைப் போலவே
காவி காட்டிச் சிரிக்கின்றன
எளிய ஊர்களும்..

- Arumai. Ithuthan mannin perumai.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன்.. அழைப்பிற்கு.:)

நன்றி மணவாளன். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...