கிளிகளுடன் கைகுலுக்கல்:-
வெகு சொகுசான வாழ்வில்
விதிகளை மீறிப் பறப்பதில்லை.
கூண்டைவிட்டுப் பறந்தால்
எஜமானனனின் தன் சுவடு
படிந்த தோளில் அல்லது கையில்..
பாசம் படிந்த தோலோடு
பழம் உண்டு ஒரே ராகத்தில்..
எப்போதாவது கற்பிக்கப்படும்
புதுவார்த்தைகளைத்
தன்னுடையதாக மிழற்றி..
வல்லூறுகளும் காக்கைகளும்
நாரைகளும் மயில்களும் கூட
வாழ்வதாக அறிந்து..
சுவருக்கு வெளியே
கடந்து செல்லும் சிலர் மட்டுமே
சில நொடிக் கீச்சல்களைக் கேட்டு..
இன்பமா துன்பமாவென
அறியாமல் கடந்து செல்ல..
அலகோ, நகமோ
கீறிவிடக்கூடுமென்பதால்..
கிளிகளுடன் கை குலுக்குவதில்லை யாரும்..
வெகு சொகுசான வாழ்வில்
விதிகளை மீறிப் பறப்பதில்லை.
கூண்டைவிட்டுப் பறந்தால்
எஜமானனனின் தன் சுவடு
படிந்த தோளில் அல்லது கையில்..
பாசம் படிந்த தோலோடு
பழம் உண்டு ஒரே ராகத்தில்..
எப்போதாவது கற்பிக்கப்படும்
புதுவார்த்தைகளைத்
தன்னுடையதாக மிழற்றி..
வல்லூறுகளும் காக்கைகளும்
நாரைகளும் மயில்களும் கூட
வாழ்வதாக அறிந்து..
சுவருக்கு வெளியே
கடந்து செல்லும் சிலர் மட்டுமே
சில நொடிக் கீச்சல்களைக் கேட்டு..
இன்பமா துன்பமாவென
அறியாமல் கடந்து செல்ல..
அலகோ, நகமோ
கீறிவிடக்கூடுமென்பதால்..
கிளிகளுடன் கை குலுக்குவதில்லை யாரும்..
8 கருத்துகள்:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இப்படிப்பட்ட மனிதர்களிடம் சில காலம் பழகியதுண்டு...!
வித்தியாசமான கவிதை. வாழ்த்துகள்.
கிளிகளை அதன் அழகில் அன்பாக அணைக்கத்தோன்றுமே :)
இன்றைய அவசர உலகத்தில் ரசனைக்கு ஏது நேரம்? பாவம் தான் கிளி! சிலநொடிக் கீச்சல் கேட்டு இன்பமா துன்பமா என அறியாமல் கடந்து செல்ல... அசத்தல் வரிகள்க்
கிளிகளுடன் கை குலுக்குவதில்லை யாரும். - Mikavum nallathu. Avaravar idathil avaravar.
Good Morning !
Have a nice week which is peaceful and prosperous.
நன்றி தனபாலன்
நன்றி மணவாளன்
நன்றி மாதேவி
நன்றி பாலகணேஷ்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))