எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 அக்டோபர், 2018

வெளி.

விசிறும் மழையில்
நனையாமலிருக்க
விசிறிக்கொண்டு
விரைகின்றன தட்டான்கள்.

மஞ்சள் பூக்களுக்கு
இறகு முளைத்துப்
பறக்கின்றன பாப்பாத்திகளாய்.

வண்ணங்கள் கலைந்துவிடுமென்ற
பயம்விடுத்து
வானவில் வரைகின்றன வண்ணாத்திகள்

வெண்டிலேட்டர் வீட்டுக்குள்
குடும்பத்தோடு குந்தி
வெளி வெறித்துக் கொண்டிருக்கின்றன புறாக்கள்.

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

ashtamilkavithaigal சொன்னது…

வாக்கியத்தை வாசிக்கும் போதே மண்வாசம் வீசுகிறது இம்மழையில்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அஷோக் ஜி

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...